டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பை 2024 டிராபியுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற இந்திய அணி வீரர்கள் 4 நாட்களுக்கு பிறகு இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உற்சாக வரவேற்பு அளித்தார். அதன் பிறகு உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னர் ஆகியோர் இணைந்து கேட் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் டெல்லி விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோட்டலுக்கு வந்த ரோகித் சர்மா நடன கலைஞர்கள் உடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹோட்டலுக்கு வந்த இந்திய வீரர்கள் சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர். அதன் பின்னர் அவருடன் இணைந்து காலை உணவு அருந்துகின்றனர்.

Scroll to load tweet…

இதைத் தொடர்ந்து மும்பை செல்கின்றனர். அங்கு மாலை 5 மணிக்கு மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக் கோப்பை டிராபியோடு இந்திய அணி வீரர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…