இலங்கை செல்லும் இந்திய அணி அறிவிப்பு - ரோகித், சூர்யகுமார் யாதவ் கேப்டன் - அபிஷேக் சர்மா, ருதுராஜ் இல்லை!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றிய புதிய சாதனை படைத்தது. இதையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
மழை வைத்த ஆப்பு – ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 2ஆவது வெற்றி!
இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றியது. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
கோலியை வெறித்தனமாக டான்ஸ் ஆட வைத்த டோலிவுட் நடிகர் இவருதான்! காரணம் என்னன்னு தெரியுமா?
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஷர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
கவுதம் காம்பீர் ஆலோசகராக இருந்த கேகேஆர் அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவும் அணிக்கு திரும்பியுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஷிவம் துபேவிற்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவங்களும் கூப்பிடுவாங்க, நானாகவும் போவேன் – லைகா கோவை கிங்ஸிற்கு ஆதரவாக வந்த நடிகர் சதீஷ்!
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திரும்ப வந்துள்ளனர். அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜாவிற்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேஎல் ராகுலும் ஒருநாள் தொடர் மூல்மாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
IND vs SL T20I Series:
ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
IND vs SL ODI Series:
ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
- 2026 T20 World Cup
- Cricket
- Gautam Gambhir
- Hardik Pandya
- IND vs SL
- India Tour of Sri Lanka
- India vs Sri Lanka ODI Series
- India vs Sri Lanka T20I Series
- KL Rahul
- Rohit Sharma
- Sanju Samson
- Shubman Gill
- Suryakumar Yadav
- T20 Captain
- T20 World Cup 2024
- T20 World Cup 2026
- Team India Squad for 3 Match T20I Series
- Team India Squad for 3 Match ODI Series