மழை வைத்த ஆப்பு – ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 2ஆவது வெற்றி!

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

Dindigul Dragons won by 8 wickets difference against IDream Tiruppur Tamizhans in 16th Match of TNPL 2024 at Coimbatore rsk

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரின் 16ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியானது மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. அதோடு 13 ஓவர்கள் கொண்ட போட்டியாகவும் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!

அதன்படி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர்கள் ராதாகிருஷ்ணன் 36 ரன்னும், துஷார் ரஹேஜா 32 ரன்னும் எடுத்து வெளியேறினர். கணேஷ் 0, பால்சந்தர் அனிருத் 2, சாய் கிஷோர் 2 ரன்னும் எடுக்க அமித் சாத்விக் மட்டும் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக திருப்பூர் தமிழன்ஸ் 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்தது. பவுலிங்கில் திண்டுக்கல் அணியில் சுபோத் பதி 3 விக்கெட்டுகள் எடுத்தார். கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.

கோலியை வெறித்தனமாக டான்ஸ் ஆட வைத்த டோலிவுட் நடிகர் இவருதான்! காரணம் என்னன்னு தெரியுமா?

பின்னர் எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணியில் தொடக்க வீரர்கள் விமல் குமார் 17 ரன்னிலும், ஷிவம் சிங் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனது 50ஆவது போட்டியில் விளையாடும் பாபா இந்திரஜித் மற்றும் பூபதி குமார் இருவரும் பார்ட்னர்ஷிப் கொடுத்து விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் பூபதி குமார் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 25 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதே போன்று பாபா இந்திரஜித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 3 ரன்கள் எடுத்த போது டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்துள்ளார். இறுதியாக 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 4 போட்டிகளில் திண்டுக்கல் 2ஆவது வெற்றியை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் தமிழன்ஸ் விளையாடிய 4 ஆவது போட்டியில் 3ஆவது தோல்வியை தழுவியது. இதுவரையில் நடைபெற்ற 4 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

அவங்களும் கூப்பிடுவாங்க, நானாகவும் போவேன் – லைகா கோவை கிங்ஸிற்கு ஆதரவாக வந்த நடிகர் சதீஷ்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios