Asia Cup: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஆசிய கோப்பையில் இன்று ஹாங்காங்கிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டி துபாயில் இன்று இரவு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலின் டி கிராண்ட்ஹோம் திடீர் ஓய்வு
இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான இந்திய அணி காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.
பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங், ஆல்ரவுண்டர்கள் என அனைத்துவகையிலும், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி காம்பினேஷன் சிறப்பாக இருந்தது. எனவே அதே ஆடும் லெவனுடன் தான் ஹாங்காங்கிற்கு எதிராகவும் இந்திய அணி ஆடும்.
இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.