சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலின் டி கிராண்ட்ஹோம் திடீர் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் காலின் டி கிராண்ட்ஹோம். சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் காலின் டி கிராண்ட்ஹோம்.
2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான காலின் டி கிராண்ட்ஹோம், 29 டெஸ்ட், 45 ஒருநாள், 41 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அபாரமான பங்களிப்பை செய்து நியூசிலாந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சாதித்த தொடர்களில் காலின் டி கிராண்ட்ஹோமின் பங்களிப்பு அளப்பரியது. காலின் டி கிராண்ட்ஹோம் நியூசிலாந்துக்காக ஆடிய 29 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி 18 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை வென்ற நியூசிலாந்து அணியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார் காலின் டி கிராண்ட்ஹோம். அதேபோல 2019 ஒருநாள் உலக கோப்பையில் கிட்டத்தட்ட கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியிலும் காலின் டி கிராண்ட்ஹோமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு
இந்நிலையில், 36 வயதான காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். குடும்பத்துடன் நேரம் செலவழித்து குடும்பத்தை கவனிக்க வேண்டியதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற இதுவே சரியான தருணம் எனக்கூறி ஓய்வு அறிவித்துள்ளார் காலின் டி கிராண்ட்ஹோம்.