Asianet News TamilAsianet News Tamil

சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன் தன்னை இறக்கிவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.
 

ravindra jadeja explains why team india promoted him in the match against pakistan in asia cup 2022
Author
First Published Aug 30, 2022, 10:09 PM IST

ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க -  Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

பவுலிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் பட்டைய கிளப்பினார். ரோஹித் சர்மா (12), ராகுல்(0), ஆகியோர் சோபிக்காதபோதிலும், நல்ல பங்களிப்பு செய்த கோலி (35) மற்றும் ஜடேஜா(35) ஆட்டமிழந்துவிட்டபோதிலும், 17 பந்தில் 33 ரன்களை விளாசி, சிக்ஸருடன் போட்டியை முடித்து கொடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார் ஹர்திக் பாண்டியா.

அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 4ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டது, அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஜடேஜா சிறப்பாக ஆடி 29 பந்தில் 35 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். அவரது இன்னிங்ஸ் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு

ஜடேஜாவை 4ம் வரிசையில் இறக்கிவிட்டது பெரும் வியப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான காரணத்தை கூறியுள்ளார் ஜடேஜா. 

இதுகுறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, இடது கை ஸ்பின்னர்கள் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பவுலிங்கை இடது கை பேட்ஸ்மேன்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதால் என்னை ப்ரமோட் செய்தனர். பாகிஸ்தான் அணியில் இடது கை ஸ்பின்னர் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள்  இருக்கிறார்கள். மனரீதியாக அவர்களை எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன். நல்லவேளையாக எனது இன்னிங்ஸ் மிக முக்கியமானதாக அமைந்தது என்றார் ஜடேஜா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios