MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு

இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 2 அணிகளுமே தோற்பதற்காகத்தான் ஆடின என்று ஷோயப் அக்தர் 2 அணிகள் ஆடிய விதத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 30 2022, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம்(10), முகமது ரிஸ்வான் (42 பந்தில் 43 ரன்கள்) மற்றும் ஃபகர் ஜமான் (10) ஆகிய மூவருமே சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு சுருண்டது.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்காவை 2ம் இடத்திற்கு இறக்கிவிட்ட இங்கிலாந்து

35

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோஹித் (12), ராகுல்(0) ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ஜடேஜா தலா 35 ரன்கள் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 33 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
 

45

இந்த போட்டியில் 2 அணிகளுமே படுமோசமாக விளையாடியதாக அக்தர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், இரு அணிகளுமே படுமட்டமாக ஆடின. இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுமே ஜெயிப்பதற்காக ஆடவில்லை. தோற்பதற்காகத்தான் ஆடின. இரு கேப்டன்களும் எடுத்த சில முடிவுகள் எனக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளித்தன. ரோஹித் - பாபர் அசாம் இருவருமே யார் மோசமான கேப்டன்சி செய்வது என்பதில் போட்டி போட்டனர். 

இதையும் படிங்க - ஷுப்மன் கில் - சாரா அலி கான் துபாயில் டேட்டிங்! சாரா டெண்டுல்கர் என்ன ஆனார்? வைரல் வீடியோ
 

55

ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை உட்காரவைத்தார். பாபர் அசாம் இஃப்டிகார் அகமதுவை 4ம் வரிசையில் இறக்கிவிட்டார். சூர்யகுமார் யாதவுக்கு மேல் ஜடேஜாவை இறக்கிவிட்டார் ரோஹித். அவர் சர் ஜடேஜா; சர் பிராட்மேன் அல்ல. அவர் பந்துக்கு நிகரான ரன்னே அடித்தார். பாகிஸ்தானும் அதே தவறைத்தான் செய்தது. ஆசிஃப் அலிக்கு முன்னால் ஷதாப் கானை இறக்கியது. எனவே இரு அணிகளுமே தோற்பதற்காகத்தான் ஆடின. ஒட்டுமொத்தமாக அதுவொரு மோசமான போட்டி என்று ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.  

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
Recommended image2
CSK Playoffs 2026: SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
Recommended image3
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved