ஷுப்மன் கில் - சாரா அலி கான் துபாயில் டேட்டிங்! சாரா டெண்டுல்கர் என்ன ஆனார்? வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் துபாயில் டேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

shubman gill dating with sara ali khan video goes viral

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில். இந்திய அணிக்காக 11 டெஸ்ட்  மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அருமையாக ஆடினார்.

ஷுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராடெண்டுல்கர் ஆகிய இருவர் பதிவிடும் சமூக வலைதள பதிவுகளுக்கு இருவரும் பரஸ்பரம் கமெண்ட் செய்துவந்ததால் இருவருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. 

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்காவை 2ம் இடத்திற்கு இறக்கிவிட்ட இங்கிலாந்து

ஷுப்மன் கில் - சாரா டெண்டுல்கருக்கு காதல் என்று கடந்த 2 ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. 2020 ஐபிஎல்லில் ஷுப்மன் கில் கேகேஆர் அணிக்காக ஆடியபோது சாரா டெண்டுல்கர் பதிவிட்ட டுவீட் தான், அவர்களுக்கு இடையே காதல் என்று பேசப்பட்டதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி.

இதையும் படிங்க - பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்

ஷுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையே காதல் என்று பேசப்பட்டுவரும் நிலையில், துபாயில் ஷுப்மன் கில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மகள் சாரா அலி கானுடன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளார். ரசிகை ஒருவர் அதை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சாரா என்ற பெயர் ஷுப்மன் கில்லுக்கு பிடிக்கும்போல என்றும், சாரா டெண்டுல்கர் என்ன ஆனார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios