Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ கடைசி டி20: இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the last t20 match against new zealand
Author
Kolkata, First Published Nov 20, 2021, 9:46 PM IST

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இதையடுத்து இந்த தோல்வியை நினைத்து பெரிதாக கவலைப்படாமல், அடுத்த டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இளம் வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், முதல் 2 போட்டிகளிலும் ஆடினார். 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமானார்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், நாளை கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கவுள்ள கடைசி போட்டியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான் ஆகிய இருவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கேஎல் ராகுல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் உட்காரவைக்கப்படலாம்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios