Asianet News TamilAsianet News Tamil

IND vs SL:ரோஹித், கோலி இல்லாத இந்திய அணி.. முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the first t20 against sri lanka
Author
First Published Jan 1, 2023, 10:23 PM IST

இலங்கை அணி இந்தியாவில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது. முதல் டி20 போட்டி வரும் 3ம் தேதி மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. பும்ரா, ஜடேஜா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை இந்த ஆண்டே கோலி தகர்ப்பார்..! முன்னாள் பேட்டிங் கோச் நம்பிக்கை

ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பது உறுதியாகிவிட்டது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சற்று முன்னதாகவே முழு நேர கேப்டன்சியை ஏற்பார் என்று தெரிகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடுவார்கள். விராட் கோலி வந்துவிட்டால் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் தான் ஆடுவார். எனவே அவரது பேட்டிங்  ஆர்டரை தற்காலிகமாக மாற்ற இந்திய அணி நிர்வாகம் விரும்பாது. எனவே 3ம் வரிசையில் சஞ்சு சாம்சனும், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும் ஆடுவார்கள். கேப்டன் ஹர்திக் பாண்டியா 5ம் வரிசையிலும், தீபக் ஹூடா 6ம் வரிசையிலும் ஆடுவார்கள். 

ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தரும், அக்ஸர் படேலும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

உத்தேச இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios