MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

இளம் வீரர்கள் இனிமேல் ஐபிஎல்லில் ஜொலிப்பதன் மூலம் இந்திய அணிக்குள் எளிதாக நுழைந்துவிட முடியாது. அனைத்து உள்நாட்டு தொடர்களிலும் ஆடினால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறமுடியும் என்று பிசிசிஐ கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 01 2023, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிசிசிஐ ஆய்வுக்கூட்டம் இன்று மும்பையில் நடந்தது.பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை, ஃபிட்னெஸ் பராமரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல்லில் சீனியர் வீரர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ள, ஐபிஎல் அணிகளுடன் தேசிய கிரிக்கெட் அகாடமி இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2023 ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ..! விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு கூடுதல் டாஸ்க்

35

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தான் இந்த ஆண்டு நடக்கும் 35 ஒருநாள் போட்டிகளில் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள். யோ யோ டெஸ்ட் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. வீரர்களுக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும் நிலையில், எலும்பு பலத்தை அறிய டெக்ஸா என்ற டெஸ்ட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

45

மேலும் இளம் வீரர்களுக்கு முக்கியமான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி, துலீப் டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர்களே இந்திய அணியில் இடம்பிடிக்க கஷ்டப்படும் நிலையில், ஐபிஎல்லில் ஒரு சீசனில் சில போட்டிகளில் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்த சில வீரர்கள் நேரடியாக இந்திய அணியில் இடம்பெற்றனர். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகிவந்தது.

அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை

55

இந்நிலையில், இளம் வீரர்கள் இனிமேல் உள்நாட்டு போட்டிகளில் ஆடாமல் இந்திய அணியில் இடம்பெறமுடியாது. ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் ஆடி, அதிலும் சிறப்பாக ஆடினால் தான் இனிமேல் இந்திய அணியில் இடம்பெற முடியும். உள்நாட்டு போட்டிகளில் ஆடாமல் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்று பிசிசிஐ கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved