இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 12ம் தேதி கெனிங்டன் ஓவலில் நடக்கவுள்ளது. ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ரோஹித்துடன் ஷிகர் தவான் தொடக்க வீரராக இறங்குவார். டி20 அணியில் தனது இடத்தை இழந்துவிட்ட தவான், கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடாததால், ரோஹித்துடன் தவான் தொடக்க வீரராக இறங்குவார்.

3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5ம் வரிசையிலும் ஆடுவார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 ஆல்ரவுண்டர்களும் அணியில் இருப்பார்கள். ஜடேஜாவுடன் மற்றொரு ஸ்பின்னராக சாஹல் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

இதையும் படிங்க - 2022 T20 WC: இந்த தடவை இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு ஈசியா இருக்காது! அக்தர் அதிரடி

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.