Ashwin 500 – அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்!

தமிழக வீரர் ரவிச்சந்திரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tamilnadu CM MK Stalin has congratulated Ravichandran Ashwin for taking 500 wickets during India vs England 3rd Test Match at Rajkot rsk

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 1-1 என்று வெற்றியோடு ராஜ்கோட்டில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்துக் கொடுக்க 445 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

Ashwin 500 Wickets: எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி – அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் பந்து வீசியும் விக்கெட் விழவில்லை. 11 ஓவர்கள் வரையில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் மாறி மாறி பந்து வீசினர். இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12ஆவது ஓவர் வீசுவதற்கு வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுக்க மீண்டும் 14ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி தமிழக வீரர் அஸ்வின் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். மேலும், முத்தையா முரளிதரன் (87 டெஸ்ட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (98), அனில் கும்ப்ளே (105), ஷேன் வார்னே (108), கிளென் மெக்ராத் (110) ஆகியோர் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். அதோடு, 500 விக்கெட்டுகள் கைப்பற்றுவதற்கு அஸ்வின் 25,714 பந்துகள் வீசியுள்ளார்.

ரோகித், ஜடேஜா செஞ்சூரி, அஸ்வின் – ஜூரேல் பார்ட்னர்ஷிப், பும்ராவின் அதிரடியால் இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

அதிக பந்துகள் வீசி 500 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

25528 – கிளென் மெக்ராத்

25714 – ரவிச்சந்திரன் அஸ்வின்

28150 – ஜேம்ஸ் ஆண்டர்சன்

28430 – ஸ்டூவர்ட் போர்டு

28833 – கோர்ட்னி வால்ஸ்

 

 

இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்த அவர், சாதனைகளை முறியடித்து கனவுகளை உருவாக்கிய, சென்னையின் சொந்த பையன் அஸ்வின். ஒவ்வொரு திருப்பத்திலும், அவரது உறுதிப்பாடு, திறமையின் வெளிப்பாடு உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது.

Sarfaraz Khan: பெற்றோருக்கு பெருமை சேர்த்த சர்ஃபராஸ் கான் – வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாகப் பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள். எங்கள் சொந்த ஜாம்பவான்களுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை - முதலிடம் பிடித்த சர்ஃபராஸ் கான்!

இதே போன்று சச்சின் டெண்டுல்கர்: ஒரு மில்லியனில் ஒரு பவுலர் 500 டெஸ்ட் விக்கெட்டுகள்! அஸ்வின் ஸ்பின்னரில், எப்போதும் ஒரு வெற்றியாளர் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய மைல்கல். வாழ்த்துக்கள், சாம்பியன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக், வாசீம் ஜாஃபர் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios