ரஞ்சி டிராபி: சுதர்சன், ஜெகதீசன், அபரஜித் அபார சதம்.. ஹைதராபாத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி ஆதிக்கம்

ரஞ்சி தொடரில் தமிழ்நாடு - ஹைதராபாத் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களை குவிக்க, பதிலுக்கு தமிழ்நாடு அணி 510 ரன்களை குவித்து டிக்ளேர்  செய்தது. 115 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்துள்ளது.
 

tamil nadu lead by 115 runs in first innings hyderabad no loss for 28 runs in second innings in ranji trophy match

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழ்நாடு அணி முதல் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணி:

பாபா இந்திரஜித் (கேப்டன்), சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், விஜய் சங்கர், பிரதோஷ் பால், ஆர் கவின், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அஷ்வின் கிறிஸ்ட், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், சந்தீப் வாரியர்.

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்..! புதிய கேப்டன் நியமனம்

ஹைதராபாத் அணி:

தன்மய் அகர்வால் (கேப்டன்), தெலுகுபல்லி ரவி தேஜா, தனய் தியாகராஜன், பிரதீக் ரெட்டி (விக்கெட் கீப்பர்), மிக்கில் ஜெய்ஸ்வால், அபிரத் ரெட்டி, ரோகித் ராயுடு, ஜாவீத் அலி, அனிகேத் ரெட்டி, பி புன்னையா, கார்த்திகேயா கக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான தன்மய் அகர்வால் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவர் 135 ரன்களை குவித்தார். பின்வரிசையில் ரவி தேஜா மற்றும் மிக்கேல் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங் ஆடினர். ரவி தேஜா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஜெய்ஸ்வால் 137 ரன்களை குவிக்க, ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன்  ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 204 ரன்களை குவித்தனர். ஜெகதீசன் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆர் கவின் 36 ரன்கள் மட்டுமே அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த சுதர்சன் 179 ரன்களை குவிக்க, பாபா அபரஜித்தும் அபாரமாக பேட்டிங் ஆடிசதமடித்தார். அபரஜித் 115 ரன்களை குவித்தார். கேப்டன் இந்திரஜித் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்களை குவித்து தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

115 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் அபிராத் ரெட்டி ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றார். இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இன்னும் 87 ரன்கள் பின் தங்கியுள்ள ஹைதராபாத் விக்கெட்டை இழக்காமல் ஆடினால் தான், வெற்றி பெறாவிட்டாலும் தோல்வியையாவது தவிர்க்க முடியும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios