சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். போட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டிவருகிறார் கோலி.

சர்வதேச அளவில அனைத்து காலத்திலும் சிறந்த வீரர் என்ற அளவிற்கு வளர்ந்துள்ள கோலியின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்திய அணியின் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறார் கோலி. 

கோலி 2017ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன் பல நடிகைகளுடன் இணைத்து கோலியின் பெயர் அடிபட்டது. அந்த நடிகைகளில் ஒருவர் தமன்னா. 

2012ம் ஆண்டு கோலியும் தமன்னாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்தனர். அந்த சமயத்தில் கோலியும் தமன்னாவும் இணைந்து டேட்டிங் செய்ததாக தகவல்கள் வெளியாகின. கோலியுடன் இணைத்து பேசப்பட்டது குறித்து தமன்னா, தற்போது ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

கோலியுடனான உறவு குறித்து பேசிய தமன்னா, அந்த விளம்பரத்தில் நடித்தபோது விராட் கோலியுடன் அதிகபட்சம் நான்கு வார்த்தைகள் தான் பேசியிருப்பேன். அதன்பிறகு அவரை சந்தித்ததும் கிடையாது, பேசியதும் கிடையாது. ஆனால் நான் இணைந்து நடித்துள்ள பெரும்பாலான நடிகர்களைவிட விராட் கோலியுடன் நடித்தது நன்றாக இருந்தது என்று தமன்னா தெரிவித்துள்ளார். 

அந்த விளம்பரத்தில் நடித்ததற்கு பிறகு விராட் கோலியை பார்க்கவே கிடையாது என்று கூறி கோலியுடன் டேட்டின் செய்ததாக பரவிய தகவலுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.