Asianet News TamilAsianet News Tamil

BBL: சீட்டுக்கட்டாய் சரிந்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பேட்டிங் ஆர்டர்..! சிட்னி தண்டர் மாபெரும் வெற்றி

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர் அணி அபார வெற்றி பெற்றது.
 

sydney thunder beat hobart hurricanes by 62 runs in big bash league match
Author
First Published Dec 31, 2022, 2:12 PM IST

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஆலிவர் டேவிஸ், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், பென் கட்டிங், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), பிரெண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

டார்ஷி ஷார்ட், காலெப் ஜுவெல், ஷதாப் கான், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஜேம்ஸ் நீஷம், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங்  ஆடிய சிட்னி தண்டர்  அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 16 பந்தில் 33 ரன்கள் விளாசினார். ரைலீ ரூசோ 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 74 ரன்களுக்கு சிட்னி தண்டர் அணி 2 விக்கெட்டை இழந்தது. 

தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் ஆலிவர் டேவிஸும் இணைந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஆலிவர் டேவிஸ் 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 45 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது சிட்னி தண்டர் அணி.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

229 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை விரட்டிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டார்ஷி ஷார்ட்(2) மற்றும் ஜுவெல்(20) ஆகிய இருவரும் ஏமாற்றினர். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக பேட்டிங்  ஆடி அரைசதம் அடித்தார். இலக்கு கடினமானதாக இருந்தாலும் அதை விரட்டும் முனைப்பில் அடித்து ஆடிய மேத்யூ வேட், 30 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் மளமளவென சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 17 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios