பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஜீலாங்கில் நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

மார்டின் கப்டில், நிக் மாடின்சன் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், ஷான் மார்ஷ், ஜோனாதன் வெல்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்(விக்கெட் கீப்பர்), அகீல் ஹுசைன், வில் சதர்லேண்ட், டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், முஜீபுர் ரஹ்மான். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே மெல்பர்னில் டெஸ்ட்..? பிசிசிஐ தகவல்

சிட்னி சிக்ஸர்ஸ் அணி:

குர்டிஸ் பாட்டர்சன், ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், கிறிஸ் ஜோர்டான், பென் துவர்ஷுயிஸ், ஜாக்சன் பேர்ட், இஜாருல்ஹக் நவீத்.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கப்டில் (12), மாடின்சன்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். 3ம் வரிசையில் பேட்டிங் ஆடிய ஷான் மார்ஷ் 29 பந்தில் 35 ரன்கள் அடித்தார். ஆரோன் ஃபின்ச் 17 ரன் மட்டுமே அடித்தார். வெல்ஸ் 28 ரன்கள் அடித்தார். ரெனெகேட்ஸ் அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொதப்பியதால் 20 ஓவரில் ரெனெகேட்ஸ் அணி 124 ரன்கள் மட்டுமே அடித்தது. 

2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்.. ஹர்ஷா போக்ளேவின் அதிரடி தேர்வு

125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாட்டர்சன் 38 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 39 ரன்களும் அடிக்க, டேனியல் கிறிஸ்டியன் 15 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 18வது ஓவரில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.