2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்.. ஹர்ஷா போக்ளேவின் அதிரடி தேர்வு

2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார்.
 

harsha bhogle picks best test eleven of 2022

2022ம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.

2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கிரைக் பிராத்வெயிட் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். உஸ்மான் கவாஜா இந்த ஆண்டு 11 டெஸ்ட்டில் 67.5 என்ற சராசரியுடன் 1080 ரன்களை குவித்துள்ளார். கிரைக் பிராத்வெயிட் வெஸ்ட் இண்டீஸுக்காக சிறப்பாக ஆடி 14 இன்னிங்ஸ்களில் 687 ரன்கள் அடித்துள்ளார்.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்

3ம் வரிசை வீரராக சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட்டையும், தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற இடத்தை எட்டிவிட்ட பாபர் அசாமை 4ம் வரிசை வீரராகவும் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை 5ம் வரிசை வீரராகவும், ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 

தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சென், ககிசோ ரபாடா மற்றும் இங்கிலாந்து சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. ஸ்பின்னராக நேதன் லயனை தேர்வு செய்துள்ளார்.

ரபாடா மற்றும் லயன் ஆகிய இருவரும் 2022ம் ஆண்டில் அதிகபட்சமாக தலா 47 விக்கெட்டுகளையும், யான்சென் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரும் தலா 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இனியும் உங்களையே புடிச்சு தொங்கிட்டு இருக்க முடியாது.. இந்திய டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் ரோஹித் - கோலி

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 2022ன் சிறந்த டெஸ்ட் லெவன்:

உஸ்மான் கவாஜா, கிரைக் பிராத்வெயிட், ஜோ ரூட், பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், ககிசோ ரபாடா, நேதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios