Hardik Pandya Video: புதிய சிக்கலில் மும்பை இந்தியன்ஸ் – சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவதில் தாமதம்!
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் 2 லீல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் முறையாக இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளனர்.
இதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாமி படத்திற்கு மாலை போட்டு, தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ்விற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அவருக்கு குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் அவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நிலையில், அவர் உடல் தகுதி பெற இன்னும் ஒரீரு மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்கும் நிலையில், 24ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.
இன்னும் சூர்யகுமார் யாதவ் அணியுடன் இணையாத நிலையில், அவர் பெயர் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் கிட் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Suryakumar Yadav is doubtful for the first 2 games in IPL 2024. [PTI]
— Johns. (@CricCrazyJohns) March 12, 2024
- vs GT on 24th & vs SRH on 27th....!!!! pic.twitter.com/LqIDQU5yZg