Asianet News TamilAsianet News Tamil

இந்திய சந்தைக்கே வந்திராத மெர்சிடிஸ் பென்ஸ் SUV ரக சொகுசு காரை வாங்கிய சூர்யகுமார் யாதவ்!எத்தனை கோடி தெரியுமா?

ஆடம்பர சொகுசு கார் விரும்பியான சூர்யகுமார் யாதவ், ரூ. 2.15 கோடி மதிப்புள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் SUV GLS AMG 63 காரை வாங்கியுள்ளார்.
 

suryakumar yadav bought luxurious mercedes benz suv car
Author
Chennai, First Published Aug 13, 2022, 4:32 PM IST

விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்களில் சிலர் பைக் மற்றும் கார்கள் மீது பேரார்வம் கொண்டவர்கள் என்பதும், அதனால் விலையுயர்ந்த பைக், கார்களின் கலெக்‌ஷன்களை வைத்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

விளையாட்டு வீரர்களில் இந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட் வீரர்கள் தான் கோடிகளில் புரள்பவர்கள். அதனால் அவர்களால் தான் விலையுயர்ந்த கார்களை வாங்க முடியும். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பைக் மற்றும் கார்கள் மீது பேரார்வம் கொண்டவர். அவர் பழைய கால மற்றும் நவீனகால பைக் மற்றும் கார்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க - ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ரோஹித்தின் புதிய ஓபனிங் பார்ட்னர் இவர்தான்

அவரைப்போலவே சூர்யகுமார் யாதவும் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக அபாரமாக விளையாடி அந்த அணீன் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் சூர்யகுமார் யாதவ், உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக ஆடிவருகிறார்.

இந்திய அணியிலும் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்ட சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லில் நன்றாக சம்பாதித்துவிட்டார். இந்திய அணிக்காகவும் ஆடி நன்றாக சம்பாதித்துவரும் நிலையில், விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கிவருகிறார்.

அண்மையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள Porsche Turbo 911 கன்வெர்டிபிள் காரை வாங்கிய சூர்யகுமார் யாதவ், கார் கஸ்டமைசேசன் சேவையை வழங்கும் டீடெய்லிங் ஸ்டுடியோவுடனான தனது பார்ட்னர்ஷிப்பும் வைத்துள்ளார்.

இதையும் படிங்க - இந்திய அணியை பார்த்து கத்துக்கங்க.. நீங்களும்தான் இருக்கீங்களே! பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளாசிய டேனிஷ் கனேரியா

இப்படியாக கார்கள் மீது அளாதி பிரியம் கொண்ட சூர்யகுமார் யாதவ், இப்போது மெர்சிடிஸ் பென்ஸ் புதிதாக அறிமுகம் செய்துள்ள GLS AMG 63 என்ற SUV ரக காரை வாங்கியுள்ளார்.

இந்திய சந்தையில் விற்பனைக்கே வந்திராத இந்த காரை ஆட்டோ ஹேங்கர் என்ற டீலர்ஷிப் உதவியின் மூலம் இறக்குமதி செய்து வாங்கியுள்ளார் சூர்யகுமார். புதிய காரை வாங்கிய சூர்யகுமார் யாதவுக்கு அந்த ஆட்டோ ஹேங்கர் டீலர்ஷிப் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios