கம்பீர் - யுவராஜ் சிங்கை சுட்டிக்காட்டி இளம் வீரருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கேட்கும் ரெய்னா
கம்பீர் - யுவராஜ் சிங்கை சுட்டிக்காட்டி இந்திய அணியின் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. வரும் 21ம் தேதியுடன் தகுதிச்சுற்று முடியும் நிலையில், 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது.
இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆடும் லெவனை ஏற்கனவே உறுதி செய்து வீரர்களிடமும் தெரியப்படுத்திவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற 30% தான் சான்ஸ் இருக்கு..! கபில் தேவ் அதிரடி
இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர், சாஹல் ஆகிய மூவரில் இருவர் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாகவே இடம் இல்லை. டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான். அண்மையில் அபாரமாக பேட்டிங் ஆடி போட்டிகளை சிறப்பாக முடித்து கொடுத்திருக்கிறார். அதேவேளையில், ரிஷப் பண்ட் ஃபார்மில் இல்லாமல் மோசமாக ஆடியிருக்கிறார். எனவே கண்டிப்பாகவே ரிஷப் பண்ட்டுக்கு இப்போதைக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகிறார். ஆனால் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருப்பது எக்ஸ் ஃபேக்டரை அளிக்கும். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவர் அணியில் இருப்பது அவசியம். 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 தொடர்களிலும் கௌதம் கம்பீர் எப்படி ஆடினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல யுவராஜ் சிங்.. யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்திருக்கிறார். 2011 உலக கோப்பையிலும் யுவராஜ் சிங் அபாரமான பங்களிப்பை செய்தார். இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது பெரிய பலம்.
இதையும் படிங்க - நாங்களும் ரோஷக்காரங்க தான்.. 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உ லக கோப்பையை புறக்கணிக்கும் பாகிஸ்தான்..?
ரிஷப் பண்ட்டுக்கு முதல் பந்திலிருந்தே சிக்ஸர் எப்படி அடிப்பது என்று தெரியும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அசத்திவிடுவார் என்று ரெய்னா கூறியிருக்கிறார்.