தோனியின் பிளான் ஒர்க் அவுட்டாகுமா? டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

Sunrisers Hyderabad won the toss and Choose to bowl first against Chennai Super Kings in 46th IPL 2024 Match rsk

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

இதில், சன்ரைசர்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, ஹெட் இடம் பெற்றார். மேலும், மாயங்க் மார்க்கண்டே நீக்கப்பட்டுள்ளார். மார்க்கண்டே இம்பேக்ட் பிளேயராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், டி நடராஜன்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான், மதீஷா பதிரனா.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 20 போட்டிகளில் சிஎஸ்கே 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios