IPL 2023: DC vs SRH போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள்
ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
இதுவரை ஆடிய தலா 7 போட்டிகளில் வெறும் இரண்டே வெற்றிகளை பெற்றுள்ள இந்த 2 அணிகளும் 3வது வெற்றியை எதிர்நோக்கி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அப்துல் சமாத் ஆடுகிறார். மார்கோ யான்செனுக்கு பதிலாக அகீல் ஹுசைன் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் அமான் கானுக்கு பதிலாக பிரியம் கர்க் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் விலகிய கமலேஷ் நாகர்கோட்டிக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட பிரியம் கர்க்கிற்கு இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடியவர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், அகீல் ஹுசைன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அக்ஸர் படேல், ரிப்பல் படேல், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.