Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன்சி செய்து அசத்துகிறார் ஹர்திக் பாண்டியா..! அவரோட தனித்துவமே இதுதான் - கவாஸ்கர்

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை சிறப்பாக வழிநடத்திவரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை சுனில் கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

sunil gavaskar praises hardik pandya captaincy amid ipl 2023
Author
First Published Apr 29, 2023, 4:35 PM IST | Last Updated Apr 29, 2023, 4:35 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றுடன் சேர்த்து மிகச்சிறப்பான கேப்டன்சியில் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் மட்டுமல்லாது அபாரமான கேப்டனும் கூட என்பதை ஹர்திக் பாண்டியா நிரூபிக்க, அதன்பின்னர் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பையும் பெற்று அதிலும் சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறமையை காட்டினார். 

IPL 2023: 3வது வெற்றி யாருக்கு..? DC vs SRH பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்த சீசனிலும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஓபனிங்கில் இறங்கணும்..? காரணத்துடன் கூறும் மைக்கேல் வான்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், சில சமயங்களில் கேப்டன்கள் தங்களது ஆளுமை மற்றும் குணாதிசயங்களை அணிக்கும் கடத்த முயற்சிப்பார்கள்.ஆனால் ஹர்திக் பாண்டியா அப்படி இல்லை. அவரது ஆளுமையை அணி முழுக்க அவர் கடத்துவதில்லை. அவர் அவராக இருக்கிறார்.அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அதனால் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெறுகிறது. இதுதான் அவரது கேப்டன்சி மரபாக இருக்கிறது. பாண்டியா தோனியை போன்ற கேப்டனாக இருக்கிறார். அவரது அணுகுமுறையும் தோனியை போலவே இருக்கிறது. தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை ஹர்திக் பாண்டியா கற்றிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios