முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிப்பெற்றுள்ளது. 

sunrisers hyderabad team won by 8 wickets and registered their first victory

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிப்பெற்றுள்ளது. 14 ஆவது ஐபிஎல் லீக் தொடர் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதின. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையும் படிங்க: மீண்டெழுமா ஆர்சிபி..? லக்னோ - ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழப்புக்கு ஹைதராபாத் அணி 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஷிகர் தவான் ஒன் மேன் ஷோ; 99* ரன் அடித்து தனி ஒருவனாக PBKS அணியை கரைசேர்த்த தவான்! SRHக்கு கடின இலக்கு

இந்த வெற்றி மூலம் ஹைதராபாத் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் வெற்றி வெற்றி பெற்றிருந்தது குறுப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios