IPL 2023: மீண்டெழுமா ஆர்சிபி..? லக்னோ - ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

rcb and lsg teams probable playing eleven for the match in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடி தோல்விகளை தழுவிவருகிறது.

மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனிலும் களமிறங்கிய ஆர்சிபி அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, 2வது போட்டியில் படுதோல்வி அடைந்தது.

IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே

அந்த அணியின் பவுலிங் ஜோஷ் ஹேசில்வுட், ரீஸ் டாப்ளி இல்லாமல் வலுவிழந்து இருக்கும் நிலையில், ரஜத் பட்டிதார் காயத்தால் விலகியதால் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் பலவீனமாக உள்ளது. ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்கள் சிறப்பாக ஆடினால் தான் அந்த அணி ஜெயிக்கிறது. இல்லையென்றால் படுதோல்வி அடைகிறது.

இந்நிலையில், நாளை பெங்களூருவில் நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை எதிர்கொள்கிறது ஆர்சிபி. லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஆர்சிபி அணிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் சரியான மாற்று வீரர்கள் இல்லாததால் மாற்றத்திற்கு வாய்ப்பேயில்லை.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், கரன் ஷர்மா, முகமது சிராஜ்.

IPL 2023: ரஷீத் கானின் ஹாட்ரிக் வீண்.. கடைசி ஓவரில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங்..! GT-ஐ வீழ்த்தி KKR வெற்றி

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், யஷ் தாகூர், ஆவேஷ் கான், மார்க் உட், ரவி பிஷ்னோய்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios