SA20: முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசரஸ் ஈஸ்டர்ன் கேப்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

Sunrisers Eastern Cape won by 4 Wickets against MI Cape Town in 9th Match of SA20 Series

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் மற்றும் சன்ரைசரஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான 9ஆவது போட்டி கியூபெர்காவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பௌலிங்  தேர்வு செய்தது.

5 டன் மணல், 5000 ஹாக்கி பந்துகள் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் புதிய உலக சாதனை!

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அந்த அணியின் ஜார்ஜ் லிண்டே மட்டுமே அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பார்ட்மேன் 3 விக்கெட்டுகளும், மார்க்கரம் மற்றும் மகாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சென் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

டீம் மேட்டின் காதலியுடன் ஆபாசமாக பேசும் பாபர் அசாம்: சர்ச்சையான வீடியோ!

இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் மார்க்ரம் 50 ரன்களும், எர்வீ 41 ரன்களும், ஸ்டப்ஸ் 30 ரன்களும் சேர்க்க அந்த அணி 19.3 ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!

இன்று நடக்கும் முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios