தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஃபைனலில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
ஃபைனல் நேற்று நடந்திருக்க வேண்டியது. ஆனால் ஜோஹன்னஸ்பர்க்கில் மழை காரணமாக மைதானம் குளம் போல் இருந்ததால் நேற்று போட்டியை நடத்த முடியாததால் இன்று ஃபைனல் நடத்தப்படுகிறது.
IND vs AUS: டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஸ்பின்னர் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு
ஜோஹன்னஸ்பர்க்கில் நடக்கும் ஃபைனலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் சீசனில் டைட்டிலை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:
ஆடம் ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ஜோர்டான் ஹெர்மான், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜோர்டான் காக்ஸ், மார்கோ யான்சென், பிரைடான் கார்ஸ், ஆட்னியல் பார்ட்மேன், வாண்டர் மெர்வி, சிசாண்டா மகளா.
பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:
ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியுனிஸ் டி பிருய்ன், ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம்ம், வைன் பார்னெல் (கேப்டன்), ஈதன் பாஷ், மைகேல் பிரிட்டோரியஸ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.
