இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அவருக்கு மாற்று வீரராக மேத்யூ குனெமன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபாரமாக ஆடி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்வதுடன், ஸ்பின்னை வைத்துத்தான் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தவும் வேண்டும். அதனால் இந்தியாவை வீழ்த்த ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை அறிந்து, 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி.

ராகுலை விட சிறந்த வீரர்கள் இருக்காங்க.. ராகுலின் தேர்வு பாரபட்சமானது..! வெங்கடேஷ் பிரசாத் கடும் விளாசல்

சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்வெப்சன், புதுமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி. முதல் டெஸ்ட்டில் சீனியர் ஸ்பின்னர் நேதன் லயனுடன் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஆடினார். நேதன் லயனின் பவுலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொண்டு ஆடினர். அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி தான் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் ஆடியது. அந்த இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் டாட் மர்ஃபி.

அடுத்த போட்டி டெல்லியில் நடக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ரிஸ்ட் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிவிட்டார். அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் மேத்யூ குனெமன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவின் சாதனை சமன்.. ஷேன் வார்ன், ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்த அஷ்வின்

குனெமன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அந்த 4 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியதில்லை. அனுபவம் இல்லாத புதுமுக ஸ்பின்னர்களை வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். அடுத்த போட்டியில் நேதன் லயனுடன் அஷ்டான் அகர் மற்றும் டாட் மர்ஃபி ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள் என்று தெரிகிறது.