ICC WTC ஃபைனலில் இந்த 11 பேரை இறக்குங்க; வெற்றி நமக்குத்தான்! கவாஸ்கர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

sunil gavaskar picks his team india playing eleven for icc wtc final against australia

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் ஃபைனலில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் ஜெயித்து கோப்பையை வெல்ல இந்திய அணி களமிறக்க வேண்டிய ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

ICC WTC ஃபைனல்: 2 இந்திய வீரர்களை கண்டு அலறும் ஸ்டீவ் ஸ்மித்

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். அதன்பின்னர் புஜாரா, கோலி, ரஹானே என்பது வழக்கமான பேட்டிங் ஆர்டர். விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை தேர்வு செய்துள்ளார். 

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஸ்பின்னர்கள். ஷமி, சிராஜ், ஜெய்தேவ் உனாத்கத், ஷர்துல் தாகூர் ஆகியோரை ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார் கவாஸ்கர்.

ICC WTC: இப்பதான் டி20-யில் ஆடியிருக்கீங்க.. அதனால் ரொம்ப கவனமா இருங்க! இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் அறிவுரை

கவாஸ்கர் தேர்வு செய்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், முகமது ஷமி, முகமது சிராஜ்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios