ICC WTC ஃபைனல்: 2 இந்திய வீரர்களை கண்டு அலறும் ஸ்டீவ் ஸ்மித்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களை எதிர்கொள்வதை நினைத்து இப்போதே பீதியில் உள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 ஃபைனலுக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் ஃபைனலில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே இந்த இறுதிப்போட்டிக்காக தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்த போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தீவிரமாக தயாராகிவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களும் இந்த முக்கியமான போட்டி குறித்து பேசிவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஓவல் ஆடுகளம் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும். கிரிக்கெட் ஆட மிகச்சிறந்த இடம் ஓவல். இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்து நல்ல வேகத்துடன் பவுன்ஸும் ஆகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் சிறந்த முன்னெடுப்பு. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இருக்கும் என்பதால் அஷ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது சவால் என்றார் ஸ்மித்.