ICC WTC ஃபைனல்: இந்தியா - ஆஸ்திரேலியா 2 அணிகளிலும் தலா 2 வீரர்கள் ஆட்ட முடிவை தீர்மானிப்பார்கள் - மைக் ஹசி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் நிலையில், இந்த போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் இரு அணிகளின் தலா 2 வீரர்களை மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 ஃபைனலுக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் ஃபைனலில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே இந்த இறுதிப்போட்டிக்காக தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்த போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
அந்தவகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து பேசிய மைக் ஹசி, விராட் கோலியை கடந்து யோசிக்கவே முடியாது. அவர் மீண்டும் அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் மிகச்சிறந்த ஃபார்முக்கு வந்துள்ளார். எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடுவது இந்திய அணிக்கு மிக முக்கியம்.
IPL 2023: ஐபிஎல் 16வது சீசனின் சிறந்த பிளேயர் இவர் தான்.! இளம் வீரருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்த இந்திய கண்டிஷனிலிருந்து இங்கிலாந்து கண்டிஷன் முற்றிலும் வேறுபட்டது. எனவே அந்த தொடரின் முடிவை கருத்தில்கொள்ள தேவையில்லை. இங்கிலாந்தில் நடப்பதால் ஃபாஸ்ட் பவுலர்களின் பங்களிப்பு முக்கிய பங்காற்றும். எனவே ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.