IPL 2023: ஐபிஎல் 16வது சீசனின் சிறந்த பிளேயர் இவர் தான்.! இளம் வீரருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்
ஐபிஎல் 16வது சீசனின் சிறந்த வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் என்று டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் நேற்றுடன் முடிந்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.
இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரையும் கவர்ந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, நெஹல் வதேரா ஆகிய பேட்ஸ்மேன்கள் அபாரமாக பேட்டிங் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவிற்கு தங்களது திறமையை நிரூபித்தனர்.
மேற்கூறிய அனைவரும் சிறப்பாக ஆடியிருந்தாலும், இந்த சீசனில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் ஜெய்ஸ்வால், இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடி 14 போட்டிகளில் 164 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 48 என்ற சராசரியுடன் ஆடி 625 ரன்களை குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளார்.
கேகேஆருக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால், ஒரு சதமும் அடித்தார். அவரை ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்
இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், என்னை பொறுத்தமட்டில் இந்த சீசனின் சிறந்த வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். எல்லா விதமான ஷாட்டுகளையும் ஆடுகிறார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடும் அவர், பவுலர்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறார். ஷுப்மன் கில் கொஞ்சம் பழைய வீரராகிவிட்டார். அதனால் இந்த சீசனில் என்னை கவர்ந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.