IPL 2023 Final CSK vs GT: விடாது பெய்த மழை.. சிஎஸ்கே - குஜராத் ஃபைனல் மே 29ம் தேதிக்கு(நாளை) ஒத்திவைப்பு
ஐபிஎல் 16வது சீசன் ஃபைனல் மழையால் நடத்த முடியாமல் போனதால் போட்டி மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 28ம் தேதி நடப்பதாக இருந்தது. ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு
இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தாமதமான நிலையில், மழை நின்றபின் அம்பயர்கள், போட்டி ரெஃப்ரி மைதானத்தை ஆய்வுசெய்ய தொடங்கினர். 9 மணிக்கு மேல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் மீண்டும் தாமதமானது.
IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்
11 மணி வரை பொறுத்திருந்து பார்க்கப்பட்டது. மழை நிற்காததால் சிஎஸ்கே - குஜராத் இடையேயான இறுதிப்போட்டி மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மே 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.