ஃபிட்டா, ட்ரிம்மா இருந்தால் தான் இந்திய அணியில் இடமா..? ஃபேஷன் ஷோவுக்கா ஆள் எடுக்குறீங்க..? கவாஸ்கர் அதகளம்
இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டத விவகாரத்தில் இந்திய அணி தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான், தனது அபாரமான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 2019-2020 ரஞ்சி சீசனில் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களையும், 2021-2022 சீசனில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 982 ரன்களையும் குவித்த சர்ஃபராஸ் கான்,
ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி ஏராளமான ரன்களை குவித்துவருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. டான் பிராட்மேனுக்கு அடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் 80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் வீரர் சர்ஃபராஸ் கான் தான். அப்படியிருக்கையில், அவரை எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகிய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
ரஞ்சி தொடரில் கடைசியாக டெல்லிக்கு எதிராக ஆடிய போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்தார் சர்ஃபராஸ் கான். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 125 ரன்கள் சர்ஃபராஸ் கான் அடித்தது. அபாரமாக பேட்டிங் ஆடி முதல் தர கிரிக்கெட்டில் தனது 13வது சதத்தை விளாசினார் சர்ஃபராஸ் கான். 37வது ரஞ்சி போட்டியில் 13வது சதத்தை அடித்து அசத்தியிருந்தார்.
சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் அசாதாரணமான பேட்டிங்கை தொடர்ச்சியாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்தும் கூட, அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற ஒரு கருத்து உள்ளது. விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் மாதிரியான உடல் தோற்றம் சர்ஃபராஸ் கானுக்கு இல்லை. ஆனால் அதற்காக சர்ஃபராஸ் ஃபிட்னெஸுடன் இல்லை என்று அர்த்தமல்ல.
அதிகமான உடல் எடையுடன் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்கள் ஏராளம் உள்ளனர். ஜாக் காலிஸ், இன்சமாம் உல் ஹக் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட்டர்கள் பார்க்க ஃபிட்டாக தெரியமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட்டர்கள். எனவே உடல் தோற்றத்திற்காக ஒரு வீரர் புறக்கணிக்கப்படுவது சரியல்ல. அதைத்தான் கவாஸ்கரும் கூறியுள்ளார். சர்ஃபராஸ் கானை புறக்கணித்ததற்காக இந்திய அணி தேர்வாளர்கள், அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.
இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஸ்லிம் மற்றும் ட்ரிம்மாக இருக்கும் நபர்களை மட்டும்தான் அணியில் எடுப்பீர்கள் என்றால், ஃபேஷன் ஷோவுக்கு எடுப்பதை போல் ஆட்களை எடுத்து கையில் பேட், பந்தை கொடுத்து பயிற்சியளித்து களத்திற்கு அனுப்புங்கள். கிரிக்கெட் ஆடுவதற்கு வீரர்களின் உடல்வாகையோ, எடையையோ வைத்து அவர்களை புறக்கணிக்கக்கூடாது. ஆள் தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள். அவர் பேட்டிங்கிலோ அல்லது பவுலிங்கிலோ என்ன சாதித்திருக்கிறார் என்பதை வைத்து தேர்வு செய்யுங்கள். அவர் களத்தில் நின்று சதம் அடித்துவிட்டு பின்னர் ஃபீல்டிங் செய்கிறார். அதுவே அவரது ஃபிட்னெஸ் என்னவென்பதை தெரிவித்துவிடும்.
ஃபிட்டாக இல்லையென்றால் எப்படி ஒரு வீரரால் சதம் விளாச முடியும்..? அல்டிமேட்டாக கிரிக்கெட் தான் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யோ யோ டெஸ்ட் மட்டுமே ஃபிட்னெஸை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்க முடியாது. நன்றாக கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.