ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar believes ishan kishan will hit triple century in odi

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் ரோஹித் சர்மா. இலங்கைக்கு எதிராக 2014ல் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த 264 ரன்கள் தான் சாதனையாக இருக்கிறது. மார்டின் கப்டில் 237 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ஃபகர் ஜமான், கிறிஸ் கெய்ல் ஆகிய வீரர்களும் இரட்டை சதம் அடித்துள்ளனர். இவர்களில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 3 முறை இரட்டை சதமடித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் என்ற சாதனையை இனிமேல் எந்த வீரரும் முறியடிக்கமுடியாது என கருதப்பட்ட நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36வது ஓவரிலேயே இரட்டை சதமடித்த இஷான் கிஷன், முச்சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து அந்த அருமையான வாய்ப்பை தவறவிட்டார்.

PAK vs NZ: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை..! பாகிஸ்தானை வைத்து நியூசிலாந்து செய்த தரமான சம்பவம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 126 பந்தில் இரட்டை சதமடித்து, அதிவேக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதமடித்திருந்த நிலையில், அவரது சாதனையை முறியடித்தார். மேலும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர், வங்கதேசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் ஆகிய சாதனைகளையும் படைத்தார்.

131 பந்தில் 210 ரன்கள் அடித்து இன்னிங்ஸின் 36வது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்னும் 14 ஓவர்கள் எஞ்சியிருந்ததால், அதில் 35-40 பந்துகளை எதிர்கொண்டிருந்தால் அவர் முச்சதம் அடித்திருக்கக்கூட வாய்ப்பிருந்தது. அப்படி அடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கலாம். ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை தகர்க்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் 36வது ஓவரில் இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து அந்த அருமையான வாய்ப்பை தவறவிட்டார்.

அந்த போட்டியில் இஷான் கிஷன் முச்சதத்தை தவறவிட்டிருந்தாலும், கண்டிப்பாக முச்சதம் அடிப்பார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

IPL 2023: சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் செயல்படலாம்..? தோனியா ஸ்டோக்ஸா..? கிறிஸ் கெய்ல் அதிரடி

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், இளம் வீரர்களை பார்க்கும்போது கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பது தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தது அபாரமான சாதனை. 35 - 36வது ஓவரிலேயே மிக எளிதாக இரட்டை சதம் அடித்துவிட்டார். இரட்டை சதத்திற்கு பின் அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முச்சதத்தை விளாசியிருப்பார் இஷான் கிஷன். அவர் பேட்டிங் ஆடும் விதத்தை பார்க்கையில், கண்டிப்பாக முச்சதம் அடிப்பார். இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் இஷான் கிஷன். இந்த இளம் வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தது மிகப்பெரிய சாதனை. இந்த காலக்கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் வானமே எல்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios