கிரிக்கெட்டின் பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. 

முதல் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு பர்மிங்காமில் தொடங்குகிறது. இரு அணிகளுமே ஆஷஸ் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆடும் என்பதால் இந்த தொடர் மிக விறுவிறுப்பாக இருக்கும். 

உலக கோப்பையை வென்ற உத்வேகத்தில் இங்கிலாந்து அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஆஷஸ் தொடரில் ஆடுகிறது. ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் திரும்பியுள்ளதால் ஆஸ்திரேலிய அணியும் வலுவாக உள்ளது. 

இரு அணிகளுமே வலுவாக உள்ள நிலையில், முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் எந்த வீரர் இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ், போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கும் வல்லமை பெற்ற வீரர் வார்னர். வார்னர் ஒரு தலைசிறந்த மற்றும் அபாயகரமான தொடக்க வீரர். எனவே அவரை முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த விடாமல் வீழ்த்துவது, மீதமுள்ள போட்டிகளில் அவரை கட்டுப்படுத்துவதற்கு நல்ல அடித்தளமாக அமையும் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.