நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பெரும் சிம்மசொப்பனமாக திகழ்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் சமகாலத்து தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஸ்மித். 

ஸ்டீவ் ஸ்மித் நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான ஒரு பேட்ஸ்மேன். ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வந்த பிறகு, வேற லெவலில் இருக்கிறார். முன்பு ஆடியதை மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான், அவர் இறங்கிய முதல் போட்டி. தடைக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து மிரட்டினார். முதல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஸ்மித் தான் முக்கிய காரணம். 

இந்நிலையில், இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாள் தான் ஆட்டம் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது. 

கடந்த போட்டியில் நிலைத்து ஆடி இங்கிலாந்திடம் இருந்து வெற்றியை பறித்த ஸ்மித், இந்த போட்டியிலும் அந்த அணிக்கு கடும் சவாலாக திகழ்கிறார். ஸ்மித்தை வீழ்த்துவதற்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவதை பிராட், ஆர்ச்சர் மற்றும் வோக்ஸ் ஆகிய மூவருமே ஒரு உத்தியாக பயன்படுத்தினர். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசினர். 

ஆனால் சற்றும் அசராத ஸ்மித், அந்த பந்துகளை அடிக்காமல் தொடர்ந்து விட்டுக்கொண்டே இருந்தார். பந்தை மிஸ் செய்வதை கூட சாதாரணமாக செய்யாமல், அந்த பந்துகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை செய்தார். பந்தை மிஸ் செய்வதிலும் கூட தனது ஆதிக்கத்தை செலுத்தி பவுலர்களை தெறிக்கவிட்டார். அந்த வீடியோக்கள் இதோ.. 

Steve Smith goes through his full repertoire of leaves

Discuss... (Sound on pls)