Asianet News TamilAsianet News Tamil

இந்த அணி, அந்த எணி, எந்த அணியும் வேண்டாம்; வர்ணனையாளராக விமர்சனம் செய்ய வரும் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் இந்த ஐபிஎல் தொடர் மூலமாக வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளார்.
 

Steve Smith debuts as a cricket commentator from IPL 2023
Author
First Published Mar 29, 2023, 9:02 PM IST

இந்தியா வந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 3ஆவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 4ஆவது போட்டியை டிரா ஆக்கியது. இதே போன்று முதல் ஒரு நாள் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலியா மற்ற 2 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியது.

ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி கூட கிடையாது: ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த 65 பிரபலங்கள் யார் யார்?

இதைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை முன் பதிவு செய்யாத நிலையில், அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நமஸ்தே இந்தியா, உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஆம், இந்த ஐபிஎல் 2023 தொடரில் நான் இணைகிறேன். பரபரப்பான, உணர்ச்சிமிக்க அணியில் நான் இணைகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

 

 

புதிய ஐபிஎல் அணியில் இணைய போவதாக அறிவிப்பு - வீடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆனால், எந்த அணி என்ற அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம, தெலுங்கு, ஆங்கிலும், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பங்களா ஆகிய மொழிகளில் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கிரிக்கெட் வர்ண்னையாளர்கள் கொண்ட பட்டியைல் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் இடம் பெற்றுள்ளார். இதுவரையில் ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

டேவிட் மில்லர் இல்லாமல் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ்: முதல் போட்டியிக்கான குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11 இதோ!

இதுவரையில் 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் ஒரு சதம், 11 அரைசதங்கள் உள்பட 2485 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். ஒரு முறை மட்டும் இவரது தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவிற்குப் பதிலாக களமிறங்க தயாரான அர்ஜூன் டெண்டுல்கர்!

Follow Us:
Download App:
  • android
  • ios