- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
IND vs NZ 2nd T20: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. 2வது போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்? பிளேயிங் லெவன் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா, நியூசிலாந்து டி20 தொடர்
நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 238 குவித்தது. சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசினார். பின்பு விளையாடிய நியூலாந்து அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் 2 மாற்றங்கள்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி ராய்ப்பூரில் நாளை (ஜனவரி 23) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதல் போட்டியில் பீல்டிங் செய்தபோது காயம் அடைந்த அக்சர் படேல் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய் களம் காண வாய்ப்பு உள்ளது.
அதிரடியாக நீக்கப்படும் இஷான் கிஷன்
இதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து முதல் டி20 போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய இளம் வீரர் இஷான் கிஷான் அதிரடியாக நீக்கப்பட உள்ளார். அவருக்கு பதிலாக சூப்பர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 அணியில் களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய்
அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் ஒன்டவுனில் பேட்டிங் செய்வார். மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவும், பின்வரிசையில் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் பலம் சேர்ப்பார்கள்.
பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக், துபே, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய் என்ற கலவையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிளேயிங் லெவன்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

