வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 315 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

IPL 2023 Auction: ஏலத்தில் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன்.! எந்தெந்த விலைப்பிரிவில் எந்தெந்த வீரர்கள்.? முழு விவரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய மார்னஸ் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருமே இரட்டை சதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து 251 ரன்களை குவித்தனர். லபுஷேன் 204 ரன்களையும், ஸ்மித் 200 ரன்களையும் குவித்தனர். சதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 99 ரன்னில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட, அத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் (64) மற்றும் சந்தர்பால் (51) ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Vijay Hazare: ஃபைனலில் ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்.. சௌராஷ்டிராவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த மகாராஷ்டிரா

315 ரன்கள் என்ற மெகா முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஜெயிப்பது உறுதியாகிவிட்டது.