ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை ஸ்டீவ் ஸ்மித் டைவ் அடித்து அபாரமாக கேட்ச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியில் ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் சோபிக்காமல் போக டெய்லருடன் இணைந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சனை, ஸ்மித் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் வெளியேற்றினார். அந்த வீடியோ இதோ..

Scroll to load tweet…

அதைத்தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகள் சரிய, ஒருமுனையில் நிலைத்து ஆடிய டெய்லரும் 80 ரன்களில் நாதன் லயனின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 155 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஸ்டீவ் ஸ்மித்தின் அந்த அபாரமான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதைக்கண்ட ரசிகர்கள், அவரை வெகுவாக புகழ்ந்துவருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…