கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதிய முதல் அரையிறுதி போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸை வீழ்த்தி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் செயிண்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமேசான் வாரியர்ஸ் அணி வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் அதிகபட்சமாக 25 ரன்கள் அடித்தார். அதிரடி வீரர் நிகோலஸ் பூரான் மற்றும் கிறிஸ் கிரீன் ஆகிய இருவரும் தலா 11 ரன்கள் அடித்தனர். இவர்களை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 13.4 ஓவருக்கே அமேசான் வாரியர்ஸ் அணி 55 ரன்களுக்கு சுருண்டது.

Also Read - ஐபிஎல் 2020: ரெய்னா, ஹர்பஜன் இல்லைனா என்ன..? சிஎஸ்கே எப்போதுமே கெத்துதான்

56 ரன்கள் என்ற எளிய இலக்கை செயிண்ட் லூசியா அணியின் தொடக்க வீரர்களே அடித்துவிட்டனர். கான்வால் 32 ரன்களும் மார்க் டெயல் 19 ரன்களும் அடித்து, வெறும் 4.3 ஓவரில் இலக்கை எட்டினர். இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற செயிண்ட் லூசியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

வியாழக்கிழமை(செப்டம்பர் 10) டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி நடக்கவுள்ளது.

Also Read  - ஐபிஎல் 2020: அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள்.. தோனி, ரோஹித்தையே தூக்கியடித்த வெளிநாட்டு வீரர்