ஓய்வு முடிவை அறிவித்த 33 வயதான இலங்கை வீரர் லஹிரு திரிமன்னே!

இலங்கை அணியின் பேட்ஸ்மேனும், வேகப்பந்து வீச்சாளருமான லஹிரு திரிமன்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sri Lankan cricketer Lahiru Thirimanne announces retirement from all format of Cricket

கடந்த 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இலங்கையில் பிறந்து வளர்ந்த லஹிரு திரிமன்னே, 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். தற்போது 33 வயதான திரிமன்னே இதுவரையில் 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2080 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 127 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,194 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவ்வளவு ஏன், 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

பிசிசிஐ மீடியா உரிமைக்கான டெண்டர் நாளை வெளியீடு; டி20, ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு தனித்தனி டெண்டர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை இலங்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடிய திரிமன்னே நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு கிரிக்கெட் வீரராக என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதனை நான் சிறப்பாக செய்துவிட்டேன்.

500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் – ஜடேஜா சுழல் காம்போ!

கிரிக்கெட் மீது அதிக மதிப்பும், மரியாதையும் எனக்கு இருக்கிறது. நான், எனது தாய் நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமையை நான் நேர்மையாக செய்து முடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகாலமாக எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், சக வீரர்கள், பயிற்சியாளர், மருத்துவ நிபுணர்கள் என்று அனைவருக்கும் எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios