வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் பெரேரா மற்றும் கேப்டன் கருணரத்னே ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். அவசரப்பட்டு விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாகவும் கவனமாகவும் ஆடினர். ஒருமுனையில் கருணரத்னே நிதானமாக ஆட, குசால் பெரேரா அடித்து ஆடி ரன்களை குவித்தார். 

அதிரடியாக ஆடிய குசால் பெரேரா அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்தனர். 32 ரன்கள் அடித்த கருணரத்னே, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் பந்தில் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசால் பெரேரா 64 ரன்களில் ரன் அவுட்டானார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த குசால் பெரேராவை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் வீழ்த்த முடியாத நிலையில், ரன் அவுட்டாகி வெளியேறினார். 

18வது ஓவரிலேயே இலங்கை அணி 100 ரன்களை கடந்துவிட்டது. ஃபெர்னாண்டோவும் குசால் மெண்டிஸூம் ஆடிவருகின்றனர்.