ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 106 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று துபாயில் நடந்துவரும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, மதீஷா பதிரனா.
இதையும் படிங்க - Asia Cup: பந்து பேட்டில் படவே இல்ல.. ஆனால் பதும் நிசாங்கா அவுட்..! தேர்டு அம்பயரின் சர்ச்சை முடிவு
ஆஃப்கானிஸ்தான் அணி:
ரஹ்மதுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், கரிம் ஜனத், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா ஆகிய இருவரையும் ஃபரூக்கி வீழ்த்தினார். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் பதும் நிசாங்கா ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பானுகா ராஜபக்சா மட்டும் அதிரடியாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். ஆனால் நன்றாக ஆடிய அவரும் ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபரூக்கி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், முஜீபுர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
106 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணி விரட்டிவருகிறது.
