SL vs IRE: மதுஷ்கா, குசால் மெண்டிஸ் அபார இரட்டை சதங்கள்..! முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை அடித்தது இலங்கை

இலங்கை - அயர்லாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்கள் அடிக்க, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 
 

sri lanka declares first innings for 704 runs with the help of madushka and kusal mendis double centuries against ireland in first test

அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஜேம்ஸ் மெக்கொலம், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், பீட்டர் மூர், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஆண்டி மெக்பிரைன், கிரஹாம் ஹூம், மேத்யூ ஹம்ஃப்ரேஸ், பெஞ்சமின் ஒயிட்.

இலங்கை அணி: 

நிஷான் மதுஷ்கா, திமுத் கருணரத்னே (கேப்டன்), குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ.

IPL 2023: தோனி நினைப்பதை அந்த பையன் செய்கிறான்.. அதனால் தோனி அவனை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி யூஸ் பண்றாரு..!

முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ரன்களை குவித்தார். அதன்பின்னர் பால் ஸ்டர்லிங் மற்றும் கர்டிஸ் காம்ஃபெர் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஸ்டர்லிங் 103 ரன்களையும், காம்ஃபெர் 111 ரன்களையும் குவிக்க, டக்கர் அவர் பங்கிற்கு 80 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் மதுஷ்கா மற்றும் கருணரத்னே இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 228 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடி சதமடித்த கேப்டன் கருணரத்னே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க வீரர் மதுஷ்காவுடன் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸும் அபாரமாக பேட்டிங் ஆட, இருவருமே இரட்டை சதமடித்தனர். மதுஷ்கா 205 ரன்களையும், குசால் மெண்டிஸ் 245 ரன்களையும் குவித்தனர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 268 ரன்களை குவித்தனர்.

IPL 2023: RR vs CSK அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! ராஜஸ்தான் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..!

அதன்பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸும் அபாரமாக ஆடி சதமடிக்க, அவர் சதமடித்ததும் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இலங்கை அணி. 3 விக்கெட் இழப்பிற்கு 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இலங்கை அணி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios