நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 19ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் குவித்தது.

England vs South Africa: இங்கிலாந்தை துவம்சம் செய்த கிளாசென், ஜான்சென் – தென் ஆப்பிரிக்கா 399 ரன்கள் குவிப்பு!

இதில் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 82 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்கள் சேர்த்தார். லோகன் வான் பீக் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 59 ரன்கள் சேர்த்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

NED vs SL:உலகக் கோப்பையில் தோனி – ஜடேஜா சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்த நெதர்லாந்து பிளேயர்ஸ்!

சரித் அசலங்கா 44 ரன்கள், தனன் ஜெயா டி சில்வா 30 ரன்கள் சேர்த்தனர். கடைசி வரை விளையாடிய சதீர சமரவிக்ரமா 107 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 263 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடம் பிடித்துள்ளது. நெதர்லாந்து 8ஆவது இடத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை:

பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, சமீகா கருணாரத்னே, துஷான் ஹேமந்தா, மகீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா.

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

இலங்கைக்கு தண்ணி காட்டிய ஏங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் – எக்ஸ்டிரா 33, நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு!