லங்கா பிரீமியர் லீக்கில் டிராபி வென்ற சரித் அசலங்கா இலங்கை அணிக்கு கேப்டனாக நியமனம், டி20 அணி அறிவிப்பு!

இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka Announced 16 Member T20I Squad against India for 3 T20 Match, Charith Asalanka to lead rsk

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல்கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 Budget: ரூ.17,000 கோடி வருவாய் ஈட்டும் பிசிசிஐக்கு வரி இல்லை, தனிநபருக்கு 10 சதவிகிதம் வரியா?

இதே போன்று தான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் இந்த தொடர் மூலமாக தனது பணியை தொடங்குகிறார். இலங்கை அணியின் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று இலங்கை வந்த நிலையில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த இலங்கை குரூப் சுற்று போட்டியுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த வணிந்து ஹசரங்கா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மேலும், இலங்கை அண்டர்19 கேப்டனாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன் கடந்த 21 ஆம் தேதி நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஜாப்னா கிங்ஸ் அணி 4ஆவது முறையாக டைட்டில் வென்றது. அந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் நீயாகவும், நீ நானாகவும் மாறும் நாள் - எளிமையாக நடந்த இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சகாரியா திருமணம்!

மேலும், தினேஷ் சண்டிமாலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சீனியர் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து தனன்ஜெயா டி சில்வா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று அதிக விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்த நுவான் துஷாரா அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் 27 ஆம் தேதி பல்லேகலே மைதானத்தில் தொடங்குகிறது.

டி20 போட்டிகள் அட்டவணை:

ஜூலை 27: இந்தியா – இலங்கை, முதல் டி20, இரவு 7.00 மணி, பல்லேகலே

ஜூலை 28: இந்தியா – இலங்கை, 2ஆவது டி20, இரவு 7.00 மணி, பல்லேகலே

ஜூலை 30: இந்தியா – இலங்கை, 3ஆவது டி20, இரவு 7.00 மணி, பல்லேகலே

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios