2024 Budget: ரூ.17,000 கோடி வருவாய் ஈட்டும் பிசிசிஐக்கு வரி இல்லை, தனிநபருக்கு 10 சதவிகிதம் வரியா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் வரி கோட்பாட்டின் படி ரூ.7 – ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனிநபருக்கான 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது எக்ஸ் பக்கங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தான் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செயது உரையாற்றினார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சமாக தங்கம், வெள்ளிக்கான சுங்கவரி 6% ஆகவும், பிளாட்டினத்திற்கான சுங்கவரி 6.4% சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
அதோடு, தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ. 50,000லிருந்து ரூ. 75,000ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும், புதிய வரி அடுக்குகளின் படி ரூ.3 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை. ஆனால், ரூ.3 முதல் ரூ.7 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனிநபர்களுக்கு வருமான வரியாக 5 சதவிகிதம் விதிக்கப்பட்டது. இதே போன்று ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனிநபர்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.
இதே போன்று 10-12 லட்சம் 15%, ரூ. 12-15 லட்சத்துக்கு 20% மற்றும் அதற்கு மேல் ரூ. 15 லட்சம் 30 சதவிகிதம் என்று வரி விதிக்கப்பட்டதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சாதாரணமாக ரூ.7 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனிநபர்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை தூண்டியுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் இதை மட்டும் செய்தால், சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு?
அதே நேரத்தில் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எந்த வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ரூ.17,000 கோடி வரையில் வருமானம் ஈட்டி வரும் பிசிசிஐக்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வு விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. இதன் காரணமாக பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அரசு நடுத்தர வர்க்கத்தை புறக்கணிக்கிறதா என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு தரப்பில் வரிகள் அதிகரித்திருந்தாலும், நடுத்தர மக்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை. பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அரசு அமைப்பு கிடையாது. இது தனியார் கார்ப்பரேட் நிறுவனம். மேலும், கிரிக்கெட் என்ற விளையாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு என்பதால், பிசிசிஐக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.